நேற்று, மத்தியநிதி அமைச்சர்  அருண்ஜெட்லி தலைமையில்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ஜெட்லி,  ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கான அறிவிப்பை இறுதிசெய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் ஒரு முனை வரி விதிப்பைக் கொண்டுவரும் வகையில், சரக்கு மற்றும் சேவைவரிகளை (Goods and Services Tax) அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி சட்டம் அமல் படுத்துவதற்கான புதிய சட்டத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. எனவே ஜிஎஸ்டி சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply