மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம்தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனிவிமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று  தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர்செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறியழுதார்.

Leave a Reply