ஜெயலலிதாவுக்கு திடீர்மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று (04.12.2016) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதயவியல், சுவாசயியல் மற்றும் தீவிரசிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தொடர்மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அப்பல்லோ மருத்துவமனை முன்பு தமிழக மூத்த அமைச்சர்கள், டிஜிபி உட்பட உயரதி காரிகள் உள்ளிட்டோர் குவிந்த வண்ணம் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் மாநிலம் முழுவதும் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் உடல் நலம் பெறவேண்டும் என அதிமுகவினர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply