ஜெயலலிதா மீண்டும் சிறைசெல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்தமாதம் 10-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். ஜெயலலிதா மீண்டும் சிறைசெல்வது உறுதி என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் மதத்தின்பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். தமிழகத்தில் ஜிஹாத்தி தீவிரவாத அமைப்புகள் அதிகரித்து விட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தவிஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.  தமிழகத்தில் யார் ஆட்சிக்குவரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, உருவாகிவரும் ஜிஹாத்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர் பார்க்கிறேன் என்று கூறினார்.

மேலும், மதத்தின்பெயரால் பயங்கரவாதம் ஊக்குவிக்கப் படுவதை அனுமதிக்க கூடாது. அப்படி ஒரு அரசு செயல் படுமானால் அதை கலைக்கவும் மத்திய அரசு தயங்கக்கூடாது என கூறினார்.

Leave a Reply