தமிழக முதல்வர் ஜெ., நலம்பெற பிரதமர் மோடி,  வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக நேற்று இரவில் அனுமதிக்கப் பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.

இன்று மாலை பிரதமர் மோடி , ஜெ.,வுக்கு அதிகாரிகள் மூலம் பூங்கொத்து மற்றும் வாழ்த்துகடிதமும் அனுப்பியுள்ளார். டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ! என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கறையுடன் எனக்கு கடிதம் எழுதிய பிரதமருக்கு நன்றிதெரிவித்து, மோடிக்கு ஜெ., கடிதம் அனுப்பி வைத்தார்.

இது போல் கவர்னர் வித்தியாசாகர்ராவ் அனுப்பிய கடிதத்தில்; மக்களுடைய பிரார்த்தனையும், கடவுளின் அருளும் முதல்வரை நலமுடன் வாழவைக்கும். முதல்வர் மீண்டும் சிறப்பாக மக்கள்பணியாற்ற வாழ்த்துக்கள் ! என கூறியுள்ளார்.

Leave a Reply