டாஸ்மாக்கடை திறக்ககூடாது என வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
நாகர்கோவில் பகுதியில் மூடப்பட்ட ஒருடாஸ்மாக் கடையை கோட்டார் கம்போளத்தில் இருந்து ரெயில்நிலையம் செல்லும் வழியில் திறப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புதெரிவித்தனர். மேலும், மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள்.இந்தநிலையில் பொதுமக்களின் போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர், நாம் தமிழர்கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அந்தவழியாக காரில் வந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்த காரை மறித்தனர்.அதைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட இருப்பதாகவும், எனவே அதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் முறையிட்டனர். 
 
இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, மதுக்கடை அமைக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதனையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்குவந்தது. பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

Tags:

Leave a Reply