கரன்சி தடை அறிவிப்புபிறகு இதுவரை, மக்களிடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 94 கோடி செலவிடப் பட்டிருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:  பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து மக்களிடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறைந்த ரொக்கபொருளாதாரத்தை விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கடந்த நவம்பர் 9 முதல் ஜனவரி 25ம் தேதிவரை செய்திதாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக மத்திய அரசின் டிஏவிபி.க்கு 14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தவிழிப்புணர்வு மற்றும் விளம்பரப்படுத்துதல் நடவடிக்கைக்காக மொத்தம் 93.93 கோடி செலவிட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply