சரியாக இரண்டாண்டுகளுக்கு முன் இதேநாளில் ஒரு கார்ப்பரேட் ஜூவல்லரியின் திருவனந்தபுரம் கிளையில் வேலை, இரவு 7.30 க்கு உள்ளே இருக்கும் கஸ்டமரை விரைவில் அனுப்பிவிட்டு ஸ்டாக் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருக்கும் போது மேனேஜர் அருகில் வந்து " டா, நாளத்தொட்டே 500, 1000 ஒந்நும் செலவாகில்லாந்நு, நோட்டு நிரோதிச்சு, அது ங்கடே மோதி பொரிச்சுட்டா".. என திருச்சூர் மலையாளத்தில் சொல்ல(அவர் தீவிர மோடி எதிர்ப்பாளர் என்பது வேறு) என்னடா இது சின்னப்புள்ள விளையாட்டு என அதன் வீரியம் புரியாமல் மீண்டும் ஸ்டாக் எடுக்க தொடங்கினோம்.

அரைமணி நேரத்துக்குள் ஒரு அசாதாரண பரபரப்பு கஸ்டமர் முகங்களில், வெளியே ரோட்டில் டிராஃபிக் என, இரவு 12 மணி வரை கடை அடைக்கவேண்டாம் என மேலிருந்து உத்தரவு வர, டைமண்ட், அன் கட் டைமண்ட், ஆண்டிக் வகையறா ( சாதாரண நகையில் 40% லாபமெனில் கல் வைத்த நகைகளில் அது 90% என அறிக) தவிர மற்ற எல்லோ கோல்டு அனைத்தும் லாக்கரில் திணிக்கப்பட்டது. கவுண்டரில் தொலைபேசி நிற்காமல் ஒலிக்கிறது, எப்படி அட்வான்ஸ் செய்வது, என்ன நகை கிடைக்கும், எவ்வளவு பணத்துக்கு வாங்கலாம் என்ற ரீதியிலான விசாரணைகள்.

11.30 மணியளவில் கடையின் முன்புற ஆர்ச்சை இடித்துக்கொண்டு ஒரு கார் வந்து நிற்க இரண்டுபேர் சென்று பார்த்தோம், ஒரு நடுத்தர வயது பெண்மணி தனியாக ஓட்டி வந்திருந்தார், தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி கடைக்குள் அழைத்து சென்று உட்காரவைத்தோம், இருப்பு கொள்ளாமல் வெளிறிய முகத்தோடு அங்குமிங்கும் அலைந்து திரிந்து மேனேஜரின் அருகில் சென்று காரின் டிக்கியில் ஒரு பெட்டி இருக்கிறது அதில் 32 லட்ச ரூபாய் உள்ளது அதற்கு தகுந்த ஏதாவது தாங்கன்னு சொல்ல, பெட்டி எடுத்துவரப்பட்டு பணத்தை கொட்டினால் வெள்ளையா ஒரு கிலோ பொடியும், பூச்சிகளும் கூடவே, கடும் தும்மல்களுக்கு இடையில் எண்ணி முடித்த கேஷியர் முகம் இப்போது வெளிற மேம், இதிலு 89 லக்ஷம் உண்டல்லோ என்றார், அதை கேட்டு அவர் அதேயோ… அப்போ அதினும் சேர்த்து எந்தங்கிலும் கொடுக்கு என பிரியாணியில் எக்ஸ்டரா பீஸ் கேட்ட லாவகத்தில் சொன்னார். அவ்வாறாக 12 மணிக்குள் சுமார் 2.75 கோடி ரூபாய் முன்பணமாக வந்தது. அப்போது இந்தியா முழுவதும் சுமார் 90 பிராஞ்சுகள் உண்டு, டெல்லி கிளையில் 12 மணிக்குள் கடையை வழித்து சென்று விட்டார்கள் என தகவலும் கிடைத்தது, அதற்கான பில் எல்லாம் அடித்து மீண்டும் கடை திறந்தது டிசம்பர் 20 க்கு மேல், அந்த கிளை செல்ஸ்மேன்களுக்கு நவம்பர் மாத 8 நாள் வேலைக்கான சம்பளம் கேட்டு தலை சுற்றினோம் கமிஷன் மட்டுமே 1லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல்.

12.30 க்கு மேல் கடையடைத்து பைக்கில் எம்.ஜி.ரோடு, கிழக்கே கோட்டை, கவடியார் என முக்கியமான இடங்களை சுற்றினோம், பேயறைந்த முகங்களோடு கார்களில் பாய்ந்து திரிந்த ஆட்களையும், எ.டி.எம்.களில் என்னவென்றே புரியாத ஒரு சந்தோஷத்தில் 2000 ரூபாய் எடுக்க நின்ற நடுத்தர வர்கத்தையும் கண்டோம், கூடவே 2000 எடுக்க நானும் அதே சந்தோஷத்தோடு நின்றேன், என் முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு லாட்டரி விற்கும் சேட்டன் " ஒரு திவசமெங்கில் ஒரு திவசம், தெற்றாய ரீதியில் காசுண்டாக்கியன் சுகமாயிட்டு கிடந்நுறங்ஙான் சம்மதிக்காத்ததினு மோதிக்கு ஒரு ஸலாம், இந்நு எனிக்கு சுகமாயிட்டு உறங்ஙான் பற்றும் என்றார்.

டிமோ வரலாற்று பிழை, தோல்வி என பலருக்கும் பல கருத்துக்கள் உண்டெனிலும் தப்பா சம்பாதிச்சா மாட்டுவோம்னு ஒரு பயத்தை கொடுத்த, தேர்தல் கணக்கு, ஒட்டு வங்கி பற்றிய கவலையில்லாமல் இந்த நடவடிக்கை எடுத்த தைரியத்துக்காக மோடி ஜீ க்கு ஒரு ஸலாம்.

நம்பிக்கை அதானே எல்லாம். 😉

நன்றி ; Shaji Kesavan , அண்ணன் ரகுபதி

Leave a Reply