அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பயங்கரவாத ஒழிப்புக்கு புதியதிட்டங்களையும் யோசனைகளையும் கொண்டு வருவார் என பாஜக. மூத்த தலைவர் ராம்மாதவ் கூறியுள்ளார்.

இந்திய புலம்பெயர்ந்தோர்கள் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்திருந்த ஆய்வுகூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: -அமெரிக்கா – இந்தியா நட்புறவு மேலும் ஒரு அடி முன்னோக்கி எடுத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. என்று கட்சி பொதுச்செயலாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 தேர்தலுக்கு முந்தைய அவர் கருத்துப்படி இருநாட்டு உறவும் வலுப்படுவதற்கான சூழல்தெரிகிறது. அதேசமயத்தில் பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் டிரம்ப் புதியயோசனைகளை கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி – அதிபர் பராக் ஒபாமாவின் கூட்டு முயற்சியில் இருநாட்டு உறவு புதியஉச்சத்தை அடைந்தது. தற்போது இந்த நட்பு உறவு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வீறுநடைபோடும் என்று ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply