டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்துசெய்யப் படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகிளம்பியது. விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்புதெரிவித்தது. திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்துசெய்யப்படுகிறது. ஒரேஇடத்தை 2 நிறுவனங்களுக்கு தந்ததாலும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாலும் இந்த திட்டம் ரத்துசெய்யப்படுகிறது. கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க தொழிற் சாலைகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும்.

ஷேல் எரிவாயு எடுக்கும்திட்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படாது. கெயில் எரிவாயுகுழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறோம். தமிழக அரசு ஒத்துழைப்புதராமல் இருந்த இந்த திட்டத்திற்கு, கேரள அரசு தற்போது ஒத்துழைப்பு வழங்குகிறது என்றார்.

Leave a Reply