அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் வெற்றியைபறிக்கவும், ஆம் ஆத்மியை சமாளிக்கும் வகையிலும்  டெல்லி பாஜக தலைவராக  நடிகரும், அரசியல்வாதியுமான மனோஜ் திவாரியை  பாஜக  களமிறக்கியுள்ளது.

இதுபற்றி அவர் கூறியதாவது:.  நான் அனைத்துதரப்பு மக்களின் அன்பை பெற்றுள்ளேன். எனவே அனைவரு க்காகவும் நேர்மையுடன் உழைப்பேன். கட்சியின் அனைத்து  முன்னணி தலைவர்களின் ஒத்துழை ப்பையும் பெற்று சிறந்தமுறையில் பணியாற்றுவேன் . , பாஜக.,வை  பொறுத்த வரை உள்கட்சி பிரச்னை, கட்சியில் கருத்து வேறுபாடு கொண்ட அணிகள் தனியாகசெயல்படுவது போன்ற  கலாசாரத்தில் நம்பிக்கைகொண்ட கட்சியல்ல

மக்களையும் சட்டத்தையும் இரண்டாகபிரித்து வேறுபடுத்தி பார்ப்பது  முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவாலின் கொள்கை. ஆனால், பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றும் வகையில் மினிஇந்தியாவாக விளங்கும்  டெல்லியை சிறந்த முறையில் முன்னேற்ற பாடுபடுவேன்  என செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Leave a Reply