2016-ஆம் ஆண்டின் சிறந்தமனிதராக பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அந்த பத்திரிகையின் இணையதள வாசகர்கள் மத்தியில் இந்தவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட வாசகர்களில், 18 சதவீதம் பேரின் வாக்குகளைப் பெற்று பிரதமர் நரேந்திரமோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமீர்புதின், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன்அசாங்கே ஆகியோருக்கு 7 சதவீத வாக்குகளே கிடைத்தன. முகநூல் நிறுவனர் சக்கர்பெக், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியாருக்கு 2 சதவீத வாக்குகளே கிடைத்தன.


எனினும், நிகழாண்டின் சிறந்தமனிதர் யார் என்பது குறித்து டைம் நாளிதழ் ஆசிரியர்கள் இந்த வார இறுதியில் கூடி முடிவெடுக்கவுள்ளனர். அதே நேரத்தில், இணையதள வாசகர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே இந்தவாக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.

இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கருப்புபணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்க அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என மோடி அறிவித்தது இங்குள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூஜெர்சி நகரங்களில் உள்ள இந்தியர் களாலும் பாராட்டப் பட்டது. இந்த நடவடிக்கையால் பிரதமர் நரேந்திரமோடிக்கு உலகில் பரவலாக முன்னுரிமை கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
 
பிரதமர் நரேந்திரமோடி இந்த விருதை பெறுவது இது 2–வது முறை. ஏற்கனவே அவர் 2014–ம் ஆண்டு 16 சதவீத ஓட்டுகள் (சுமார் 50 லட்சம் ஓட்டுகள்) பெற்று இந்தவிருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply