அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரவழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷலை நாடுகடத்திக் கொண்டுவந்தது குறித்து தங்களது நிலைப்பாட்டை காங்கிரஸ்கட்சி தெரிவிக்க வேண்டும்:


ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கைது செய்யப் பட்டுள்ளார். எதிர் கட்சிகளுக்கு இப்போது என்ன வேண்டும்? இடைத்தரகரை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் விரும்புகிறதா?
புலந்த்சாஹர் வன்முறைக்கு அரசியல் சாயம் பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை ஆய்வாளர் உள்பட 2 பேர் வன்முறையில் இறந்தது குறித்து சிறப்பு விசாரணைகுழு விசாரித்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். அதற்குள் காங்கிரஸ் கட்சி அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.


பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.முன்பு ஒருமுறை பாகிஸ்தான் சென்றபோது, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதியை ஆரத்தழுவினார் சித்து. எனது கேப்டன் ராகுல் என்றும் அவர் கூறிவருகிறார். ஜாதியத்தை ஊக்குவிப்பதுடன், எதிர்மறை அரசியலை செய்துவருகிறது காங்கிரஸ்.


மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவித்து காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. அவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு முகங்கள்தேவை. ஜாதி-மத ரீதியில் அரசியல் செய்துவருகிறது '

நன்றி      அமித் ஷா .


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷல், துபையிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார். 
இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *