குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்.

நடைபெற்று முடிவடைந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, வருகிற 30-ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்க வுள்ளார்.

இந்நிலையில்,குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னிடம் ஆசிபெற்றார். தாயின் காலைதொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

முன்னதாக, அகமதாபாத்தில் நடைபெற்ற பாஜக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, தொண்டர்களின் மத்தியில் உரையாற்றினார்.

Comments are closed.