லண்டன் செல்வதற்கு முன் தன்னை சந்தித்ததாக மல்லையா கூறியதை அருண்ஜெட்லி மறுத்துள்ளார்.
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடுகடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கடனை திருப்பிகொடுப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். இதனை அருண்ஜெட்லி மறுத்துள்ளார்.
 

இதுகுறித்து அமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கை: என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014ம் ஆண்டு முதல் தற்போதுவரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததால், பார்லியில் அவரை சந்தித்ததுண்டு.

பிரச்னைக்கு தீர்வுகாண தனக்கு உதவுமாறு பார்லி., வளாகத்தில் என்னிடம் ஒரு முறை உதவிகோரினார். தன்னை அணுகுவதைவிட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். ராஜ்ய சபா எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தி யுள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply