ஜோதிராவ் பூலே, 1827 ஏப்ரல் 11-ல் (நேற்று), மகாராஷ்டிரத்தின் சத்தாரா மாவட்டத்தில் மாலி என்ற (சத்திரிய) சமூகத்தைச்சேர்ந்த கோவிந்த் ராவ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைக்காக போராடினால் தான் சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று தீர்க்கமாக நம்பினார் பூலே.

1873 செப்டம்பர் 24-ல், ‘சத்ய ஷோதக்சமாஜ்’ (உண்மையை தேடுபவர்களின் சங்கம்) என்ற அமைப்பை தொடங்கினார். தன்மனைவி சாவித்ரி பூலேவுக்கு தானே கல்வி கற்பித்தார். இருவரும் இணைந்து பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார்கள். விதவைகளுக்கான ஆதரவுஇல்லம் ஒன்றையும் அவர்கள் தொடங்கினார்கள். சமூகநீதியை வலியுறுத்தும் பலநூல்களையும் ஜோதிராவ் பூலே எழுதியுள்ளார்.

1888-ல் மும்பையின் மாண்ட்வி பகுதியில் நடந்தநிகழ்ச்சி ஒன்றில், தங்களுக்காக உழைத்த ஜோதிராவ் பூலேவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பாராட்டு விழா நடத்தி ‘மகாத்மா’ என்ற பட்டத்தைவழங்கினர்.

ஜோதிராவ் பூலேவின் பிறந்ததினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து மோடியின் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-

தன்னுடைய வாழ் நாள் முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்த மகாத்மா பூலே அவரது காலத்தில் பலம்வாய்ந்த மனிதராக திகழ்ந்தார். பூலேவின் கருத்துக்களை உள்வாங்கி கொண்டு சமத்துவமான, நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க கல்விக்கு அதிகமுக்கியத்துவம் அளித்து ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

Leave a Reply