இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகளவில் பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடும் ஒருகாரணமாக அமைந்துள்ளது. இதனால் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு உரியசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலர் தலை மறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து உபி பாஜக எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கூறும்போது, “தப்லீக் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள் குறித்தோ, வெளிநாட்டுக்கு சென்று திரும்பி அந்த தகவலை மறைப்பவர்கள் குறித்தோ தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு வழங்க படும்.

என்னுடைய சலேம்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த தகவலை அளிக்கலாம். மக்கள் தங்களுக்குத்தெரிந்த தகவல்களை எங்களிடம் அளிக்கலாம். அவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாப்பாக வைக்கப்படும். என்னுடைய 2 தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளேன்.

இது தொடர்பாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. வைரஸ் பரவக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தபரிசை அறிவித்துள்ளேன். மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.-

Comments are closed.