தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரகூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்தார். தமிழில் பேசி அவர் உரையை துவக்கினார்.

பிரதமர் மோடி பேசியதாவது; இந்த மைதானத்தில் வெப்பமும், உங்கள் உற்சாகமும் அதிகமாக உள்ளது. அதிகளவிலான மக்கள் இங்கும், சாலைகளிலும் ஏாரளமானோர் திரண்டுள்ளனர். தமிழகம் ஒட்டு மொத்த குரலில் நாளை நமதே, 40ம் நமதே என கூறுவது தெரிகிறது. சுந்தர மகாலிங்கம் ஆசியால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மண் துணிச்சலுக்கு பேர்போன பகுதி. ஏழைகளுக்காக பல நலத்திட்டங்கள் செய்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்தியாவின் பெரியதலைவர்கள். அவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.

2014ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். இந்தியா தற்போது வரலாற்றில் முக்கிய இடம்பிடித்து. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை திமுக, காங்., ஏற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். 2ஜி விவகாரத்தில் சிறைசென்றவர்கள் திமுக தலைவர்கள். அப்போது காங்.,ஐ கடுமையாக விமர்சித்தது திமுக. மக்களை தவறாக வழிநடத்த திமுக, காங்., முயற்சி செய்துவருகின்றன.

மோடியை தோற்கடிக்க ஊழலுக்கு ஆதரவானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். ராகுல், பிரதமர் என ஸ்டாலின் அறிவித்ததை ஒருவரும் ஏற்கவில்லை. மம்தா உள்ளிட்ட பலர் பிரதமராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை நிதியமைச்சராக இருந்தபோது மகன் நாட்டை கொள்ளையடித்தார். ஏழைகளுக்கான நிதி ஆதாரத்தை அவர்கள் தங்கள்தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

நாட்டு மக்களை யாறும் முட்டாள் ஆக்காமல் காவலாளியாக நான் இருக்கிறேன். மக்களை முட்டாள் ஆக்க நினைப்பவர்களை உங்களின் காவலனாக இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கை தமிழர்களின் வளத்திற்காகவும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களின் வளர்ச்சிக்கு திமுக-காங்., எதிரானவர்கள். ஊழல்மிகுந்த குடும்ப ஆட்சி மீண்டும் உருவாக அனுமதிக்க மாட்டோம். சர்ஜிக்கல் ஸ்டிரைக், ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்பவர்களை எவ்வாறு கையாள போகிறோம் என நீங்கள் முடிவு செய்யவேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தேசபாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது.

பயங்கரவாதிகளை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். தமிழகத்தைசேர்ந்த விமானப்படை வீரர், பாக்.,கால் சிறைபிடிக்கப்பட்ட போது இந்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுத்து அவரைமீட்டது. ஆனால் அதையும் காங்., கேள்விகேட்கிறது. நேர்மையற்றவர்களே காங்.,க்கு நண்பர்கள். பயங்கரவாத தாக்குதல் நடத்தும்போதெல்லாம் கடந்த 60 ஆண்டுகளாக ஏதும் செய்யாதவர்கள் இப்போது நியாயம் தருகிறோம் என்கிறார்கள்.

தேசியபாததுகாப்பு விஷயத்தில் காங்., அரசியல் செய்கிறது. தெரியாமல் அவர்கள் உண்மையை பேசிக் கொண்டிருக் கிறார்கள். டில்லியில் 1984 ல் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்கு நியாயம் வழங்குவார்களா. 1980 ல் எம்ஜிஆர் ஆட்சியை காங்., கலைத்தார்களே அதற்கு என்னகாரணம். அதற்கு நியாயம் வழங்குவார்களா. போபால் விஷவாயுவில் இறந்தார்களே அவர்களுக்கு நியாயம் வழங்குவார்களா.

வளர்ச்சிபணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீண்ட நாள் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேறும். மதுரை எய்ம்ஸ் மூலம் தேனிமாவட்ட மக்கள் பயனடைவார்கள். மத்திய அரசின் திட்டம் மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நான் நினைக்கிறேன். விவசாயிகளுக்காக ஏதும் செய்யாத வர்கள் இந்தபகுதி விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொகுதி. இந்த மண்ணில் காங்., வேட்பாளர்கள் எதுவும் செய்யமுடியாது. இந்த மண்ணில் அவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லாததால் வெளி மாவட்டத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.
வரும் ஏப்.,18 அன்று தேசிய முற்போக்கு கூட்டணி- அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம். இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply