தமிழகத்தில், ஒருலட்சம் கோடி ரூபாயில், புதியமேம்பால சாலைகள், விரிவாக்க பணிகள், படகு போக்குவரத்து, குடி நீர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படும்,'' என, மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர், நிதின்கட்கரி தெரிவித்தார்.

தமிழகத்தில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து, மத்திய அமைச்சர், நிதின்கட்கரி, சென்னையில் நேற்று, முதல்வர் பழனிசாமி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் கூறியதாவது: சென்னை, தாம்பரம் – வண்டலுார் – கூடுவாஞ்சேரி சாலையை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, 72.41 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சென்னையை நோக்கிவரும், தாம்பரம் – செங்கை; பூந்தமல்லி – கோயம்பேடு – வாலாஜாபேட்டை சாலை, ஆறு வழிச் சாலையாக்குதல்; சென்னை – திருப்பதி; சென்னை – நெல்லுார் ஆகியநெடுஞ்சாலைகள், 1,000 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 2,250 கோடி ரூபாய்; பூந்த மல்லி – மதுரவாயல் இடையே, 1,500 கோடி ரூபாய்; சென்னை – நெல்லுார் இடையே, 1,000 கோடி ரூபாயில் மேம்பாலசாலைகள் என, சென்னை நோக்கிவரும் சாலைகளுக்கு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
 

சென்னை – பெங்களூரு இடையே, 20 ஆயிரம் கோடி ரூபாயில், விரைவுசாலை அமைக்கப்பட
உள்ளது. தமிழக அரசுநிலம் ஒதுக்கி கொடுத்ததும், பணிகள் துவக்கப்படும். கிருஷ்ணகிரி – திண்டிவனம்; தேனி – குமுளி; சென்னை – திருப்பதி சாலை விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. சென்னை – திருப்பதி இடையே, திருவள்ளூரில்,புதிய புறவழிசாலை அமைக்கப்படும்.

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை, 4,000 கோடி; விழுப்புரம் – நாகை, 6,000 கோடி; சென்னை – தடா, 500 கோடி மற்றும் பூந்தமல்லி – கோயம் பேடு இடையே, 1,500 கோடி ரூபாயில் சாலைகளை விரிவாக்க, நிதிதயாராக உள்ளது. நான்கு மாதங்களில், பணிகள் துவங்கும்.

நாகை – ராமநாதபுரம் – துாத்துக்குடி; முசிறி – நாமக்கல் மற்றும் மதுரையில் இரு பகுதிகள் என, 1,300 கி.மீ., துாரத்துக்கு, வட்டசாலைகள் அமைக்கும் பணிகள், விரைவில் துவங்கும். பெரம்பலுார் – மத்துார் – திண்டிவனம்; திருப்பூர் – ஒட்டன் சத்திரம்; கொடைரோடு – பழநி கொடை ரோடு உள்ளிட்ட சில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப் படும். 2,000 கோடி ரூபாயில், திண்டுக்கல் – கொட்டாம்பட்டி சாலைகள் என, இந்தசாலை திட்டங்கள், 60 ஆயிரம்கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
 

துாத்துக்குடி துறைமுகம், பெரியகப்பல்கள் வந்து செல்லும் வகையில், 3,000 கோடிரூபாயில் ஆழப் படுத்தப்படும். இந்த ஆண்டு அதற்கான, 'டெண்டர்' கோரப்படும். இது, தமிழகதொழில் வளர்ச்சிக்கு உதவும்; துாத்துக்குடியில் இருந்து, அமெரிக்காவுக்கு நேரடியாக சரக்குகளை அனுப்பமுடியும். இதனால், துறைமுகத்தில், ஆண்டுக்கு, 3 லட்சம்டன் சரக்குகளை கூடுதலாக கையாள முடியும். சரக்கு கையாளும்செலவு, 50 சதவீதம் குறையும்.

மேலும், 300 ஏக்கரில், எண்ணுாரிலும்; 800 ஏக்கரில், துாத்துக் குடியிலும், கடலோர வேலை வாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.பூம்புகாரில், 148 கோடி ரூபாய்; சின்னமுட்டத்தில், 74 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். தமிழகமீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் வகையில், தலா, 80 லட்சம் ரூபாயில், 250 படகுகள் வழங்கப்படும். இது, மீனவர்வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். சென்னை அருகே, நெம்மேலி, மப்பேடு ஆகிய இடங்களில், இருசரக்கு தளவாட பூங்காக்கள் அமைக்கப்படும்.
 


கன்னியாகுமரி – ராமேஸ்வரம்; கன்னியாகுமரி – விழிஞ்ஞம் இடையே, படகுபோக்குவரத்து விரைவில் துவங்கப்படும். மும்பையில், பயணிபடகு போக்குவரத்து விரைவில் துவங்கப்படுகிறது. பின், மும்பை – சென்னை இடையே, படகு போக்குவரத்து துவங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.