தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோவிலில் உலகநன்மை வேண்டி ஸ்ரீ தசா மஹா வித்யா ஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தர ராஜன், தமிழகத்தில் எதை எடுத்தாலும் குழப்பம் ஏற்படுத்துகின்ற அரசியல் சூழ்நிலை நிலவிவருவதாக தெரிவித்தார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே ஆளுநர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது என்று கூறிய தமிழிசை தமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக காட்டமாக தொரிவித்தார்.

Leave a Reply