தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க சகோதரர்கள் தாக்கப்பட்;டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.  மூன்று தினங்களுக்கு முன்பு ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் சகோதர் திரு. சூரி (எ) சுரேஷ் அவர்கள் படுகொலை செய்யபட்டிருக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி சகோதரர் திரு. சங்கர் அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்.  நேற்று கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் திரு. சசிக்குமார் அவர்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
    சுமார் ஒரு வாரத்திற்குள் பல தாக்குதல்கள், இரண்டு படுகொலைகள் என்றால் தமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது.

    இதற்கு முந்தைய படுகொலைகள் கூட ஏதும் விசாரிக்கப்படாமல் ஒரு தெளிவற்ற நிலையில் அத்தனை விசாரணைகளும் முடங்கி கிடக்கின்றன.

    இன்று தங்கள் இயக்க சகோதரரை இழந்ததற்கு கோவையில் அதற்கான எதிர்ப்பை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட அனைவரும், போலீஸ் தடியடியினால் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    
    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இதற்கு முந்தைய படுகொலைகளும் இந்த படுகொலையும் CBI விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    அப்பொழுது தான் ஓரளவுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது.  தமிழக காவல்துறை இந்து இயக்க சகோதரர்களுக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
    
    இந்த நிலை இப்படியே நீடித்தால் தமிழகம் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

                                  என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்) 

Leave a Reply