''தமிழகத்தில் எக்காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமையாது,'' என, பா.ஜ.க, தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.விழுப்புரத்தில், அவர் அளித்தபேட்டி:

தமிழகத்தில், திமுக., – அதிமுக.,விற்கு மாற்றான, அரசு அமையவேண்டும் என, பலரும் எதிர் பார்க்கின்றனர். இந்த தேர்தலில், திராவிடகட்சிகள் வேண்டாம் என்பதால், பா.ஜ., – பா.ம.க., – ம.ந.கூ., உள்ளிட்ட, நான்கு அணிகள் மக்களை சந்திக்கின்றன. வரும் தேர்தல்முடிவு, பா.ஜ.,விற்கு சாதகமாக அமையும்.

வெங்கையா நாயுடு சிலகருத்துகளை கூறியதற்கு, தி.மு.க., தலைவர் பதில் அளித்திருப்பது, அவர்களது எதிர்காலத்திற்கு ஏற்றதல்ல.

மதச் சார்பற்ற கட்சி என்று கூறும் தி.மு.க.,விற்கு, கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவுதருவதாக கூறியிருப்பது, எவ்வாறு ஏற்புடையது.

தேவாலயங்களில், திமுக., – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் எந்தகாலத்திலும், காங்கிரஸ்  ஆட்சி அமையாது. வரும்தேர்தல், திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply