"தி.மு.க ஆட்சிக் காலத்தில், கடிதம்மட்டுமே எழுதிக் கொண்டிருந்தீர்கள். அதுவே, அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் அதைச் செய்யும்போது, கடிதம் மட்டுமே எழுதுகிறீர்களே என்று குற்றம் சாட்டினீர்கள். இன்று, ஒரு பிரதமர் மாநில முதலமைச்சரைச் சந்திக்கிறார்; அதைக் கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னால் அது நியாயமா?" என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பி.ஜே.பி தலைவர்  தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆட்சியில் இருந்த போது, தமிழ்மக்களை இலங்கை தீர்த்துக்கட்டிக் கொண்டிருந்தபோது அதைத்தடுத்து நிறுத்த பிரதமரைச் சந்தித்தீர்களா? நல்ல பஞ்சாயத்துசெய்து அதைத் தடுத்திருக்கலாமே? ஆனால், இன்று நிர்வாகரீதியாக, நட்புரீதியாக நடக்கும் சந்திப்புகளைக் கொச்சைப் படுத்துகிறீர்கள். தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் அளித்ததே திமுக தான். மத்திய–மாநில அரசுகளின் சந்திப் புகளினால் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் திட்டங்களை வரவேற்காமல், அரசியலாக்குவது சரியா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்'' என்று கூறியுள்ளார்.

Leave a Reply