தென்னிந்தியாவின் டாலர் சிட்டியான திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வரும் சாயக்கழிவுகளால்
நொய்யல் ஆற்றின் தண்ணீர் விஷமாகி விவசாயம் அழிந்து வருகிறது.இதனால் விவசாயிகள் சாயப்பட்ட றைகளை மூடச்சொல்லி கோர்ட்டிற்கு போவதும் சாய ப்பட்டறைகள் மூடப்படுவதும் இதனால் நிறைய மக்கள் வேலையிழப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த பிரச்சனைக்கு ஒரு 200 கோடி ரூபாய் செலவில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக அரசு ஏற்படுத் திக்கொடுத்து இருந்தால் என்றைக்கோ இந்த பிரச்சனை தீர்ந்து இருக்கும்ஆனால் கொள்ளையடிப்பதிலேயே குறி யாக இருக்கும் அதிமுக அரசு இதை எப்படி கண்டு கொள் ளும்.

ஆனால் பாருங்கள் மத்திய அரசு இருபது ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்சனையை தீர்க்க 200 கோடி ரூபாயை ஒதுக்கி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன் வந்துள்ளது.சத்தமில்லாமல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நல்லது செய்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்த்து வைப் பதில் திமுக அதிமுக இரண்டு அரசுகளும் வேஸ்ட்
என்பதே காலம் நமக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் சங்கதிகள்.அத்திகடவு அவினாசி திட்டம் என்று கேள்விப்
பட்டிருப்போம் சுமார் 50 ஆண்டுகளாக கொங்கு மண்டல மக்களின் ஜீவாதார பிரச்சனையாக எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் ஓவ்வொரு தேர்தல் வரும் பொழுதும் அதிமுக திமுக கட்சிகள் அங்குள்ள மக்களிடம் அத்திக்கடவு அவினாசி திட்டம் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நிறை வேற்றி விடுவோம் என்று மக்களை நம்ப வைத்து
ஒட்டு வாங்கி ஜெயித்து வந்து இன்று வரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஆகும் செலவு ஒருபெரிய விஷயம் கிடையாது ஒரு 2000 கோடி ரூபாய்க்கு
மேலே ஆகும்.ஆனால் இந்த திட்டம் நிறைவேறினால்35 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.ஆனால் அதிமுக திமுக அரசுகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை இலவசங்களுக்கு அள்ளி க்கொடுக்கிறது.

அதிமுக அரசு ஒரு வருசத்திற்கு ஆடு,மாடு,தங்கம் ,மிக் சி,கிரைண்டர், பேன்,லேப்டாப் என்று இலவசங்கள் கொடுக்க மட்டும் 60,௦௦௦ கோடி ரூபாயை அள்ளி விடுகிற து.ஆனால் அத்திக்கடவு அவினாசி திட்டம் கோவை ஈரோடு திருப்பூர்மூன்று மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வாழ் நாள் முழுவதும் தண்ணீர் பிரச்ச னையின்றி இருப்பார்கள்

ஆனால் அதற்கு 2000 கோடி ரூபாயை செலவழிக்க இந்த அரசாங்கத்திற்கு மனசு வரவில்லை என்றால் இதுவெல் லாம் ஒரு அரசு என்று சொல்வதற்க்கே நாம் வெட்கப்பட வேண்டும்..

அத்திக்கடவு அவினாசி திட்டமாவது 2000 கோடி ரூபாய் பட்ஜெட்.ஆனால் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரித்து அதை பாதிப்பில்லாத நீராக மாற்ற ஒரு 200 கோடி ரூபாய் தான் தேவைப்படும்.ஆனால் அதைக் கூட செய்யாமல் ஒரு அரசாங்கம் இருக்கிறது என்றால் அதெல்லாம் அரசாங்கம் என்று சொல்வது கேவலமா னது.

திருப்பூர் பகுதியில் சுமார் 750க்கும் மேற்ப்பட்ட சாயத் தொ ழிற்சாலைகள் இருக்கின்றது.இவற்றில் இருந்து வெளியே றும் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்று தண்ணீ ரில் கலந்து விவசாயம் அழிந்து விட்டது.இதனால் விவ சாயி கள் கோர்ட்டுக்கு போக கோர்ட் அனைத்து சாயக்கம் பெனி களும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து சாயக்க ழிவு களை சுத்திகரித்து அதற்கு பிறகே வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது கோர்ட்.

ஆனால் நம்முடைய மக்கள் எப்படி பட்டவர்கள் என்பத ற்குஇந்த சாய கழிவுகளை சுத்தி கரித்து அனுப்ப அவர்கள்
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் பணம் இருக்கிற முதலாளிகள் தனியாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தார்கள்.வசதி இல்லாதவர்கள் பத்துபேர் ஒன்று சேர்ந்து பணம் போட்டு சுத்திகரிப்பு நிலயங்க ளை அமைத்து சுத்திகரித்து சாயக்கழிவு நீரை ஆற்றில் விட்டார்கள்.

கோர்ட்டு உத்தரவிற்காக ஏதோ பேருக்கு நம்ம மக்கள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து சாயக்கழிவுகளை
சுத்திகரித்து அனுப்பினார்களே தவிர முழு அளவில் சாயக்கழிவை சுத்திகரிக்க அவர்களிடம் பணமும் இல் லை தொழில்நுட்பமும் தெரியவில்லை.இதனால் அரை குறையாக வெளிவரும் சாயக்கழிவுகளினால் நொய்யல்
ஆறு நாசமாக போச்சு என்று விவசாயிகள் மீண்டும் கோர்ட்டிற்கு போனார்கள்.

கோர்ட்டோ சுத்திகரிப்பு நீரில் ஒரு சொட்டு கழிவு கூட இருக்கக்கூடாது.அப்படி செய்ய முடியும் என்றால் கம் பெனியை நடத்துங்கள்.இல்லையென்றால் மூடிவிட் டு போங்கள் என்று உத்தரவு போட ஆகட்டும் ஐயா என்று
தலையாட்டிவிட்டு வந்தார்கள் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள்.முடிந்த அளவிற்கு அவர்களும் முயற்சி செய்து பார்த்தார் கள் ஆனால் அவர்களால் சாயக்கழிவை0% சுத்திகரிப்பை செய்ய முடியவில்லை

இதனால் கோர்ட் உத்தரவுப்படி சாயப்பட்டறைகள் மூடப்பட்டது.நிறைய பேர் வேலை இழந்தார்கள்.இந்த காலக் கட்டத்தில் கோயம்புத்தூரில் கருணாநிதி ஒரு செம்மொழி மாநாடு என்கிற பெயரில் குடும்பத்தோடு
கும்மியடித்து மாநாடு ஒன்றை நடத்தினார்.அதற்கு செலவான தொகை எவ்வளவு தெரியுமா?சுமார் 350
கோடி ரூபாய்.

ஆனால் அதே கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த சாயக் கம்பனிகள் சாயக்கழிவை சுத்திகரிக்க நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க தேவையான 200 கோடிரூபாய் கேட்டு அரசிடம்
மன்றாடி நின்றது.

350 கோடி ரூபாய் செலவில் கனிமொழி அரசியலில் தேர்ந்தவரா இல்லை இலக்கியத்தில் சிறந்த வரா என்று பட்டி மன்றம் நடத்திய கருணாநிதி இந்தஅத்தியாவசிய பிரச்சனைக்கு எதற்கு அனாவசிய செலவு அதை சாயப் பட்டரை கம்பனிகளே பார்த்துக்கொள்ளட்டும்என்று கண்டு க்கொள்ளாமல் விட்டு விட்டார்.

2011 தேர்தலில் கருணாநிதி வீட்டிற்க்கு போக மீண்டும் வந்த ஜெயலலிதா ஆரம்ப ஜரூரில் சாயப்பட்டறை கழிவு களை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வட்டியில்லாத கடனாக 200 கோடி ரூபாய் அளிக்கப்படும்
என்று பெருத்த ஆரவாரங்களுக்கு இடையில் அறிவித் தார்.

நல்லாக்கேட்டுக்கொள்ளுங்கள் தமிழகத்தின் தொழில் நகரத்தின் அத்தியாவசிய பிரச்சனையை தீர்க்க 200 கோடியை வட்டியில்லா கடனாக அளித்த ஸாரி அறிவி த்த அம்மா வருஷத்திற்கு 60,௦௦௦ கோடி ரூபாயை இலவ சங்களுக்கு அள்ளி விட்டார் என்றால் தமிழ் நாடு எப்படி முன்னேறும்?

சரி அப்படி அறிவித்தாரே அதையாவது கொடுத்தாரே இல்லையே..வழக்கம் போல அறிவிப்பாகவே போய் விட்டது.ஆனால் பாருங்கள் தமிழக பிஜேபி செயலாளர்
வானதி சீனிவாசன் மத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சர் ஸ்ம்ரிதிஇரானி வர்த்தக இணை அமைச்சர்
ஆகியோரிடம் இந்த பிரச்சனையை பாதிக்கப்பட்ட
கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அதிக அக்க றையுடன் இந்த பிரச்சனையை எடுத்து சென்றார்.

பாருங்கள் மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை மத்தியஅமைச்சர்கள் ஆராய்ந்து நிதி ஆயோக்கின் சிஇஓ அமிதாப் காண்ட்டை வலியுறுத்த அவரும் திட்டத்திற்கு ஒகே சொல்லி 200 கோடி ரூபாயை ஒதுக்கி விட்டார்.
மக்களின் அத்தியாவசிய பிரச்சனையில் அசால்டாக இருந்துக்கொண்டு எத்தனை ஆயிரம் கோடிகளை தமிழக அரசாங்கம் கரியாக்கிகொண்டிருக்கறது என்ப தை நினைத்து பார்த்தாலே நாட்டுப்பற்றுள்ள அனைவ ரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.

தனியொரு மனுஷியாக களம் இறங்கி திருப்பூர் மக்களி ன் நீண்ட நாள் பிரச்சனையான சாயப்பட்டறைகளின் கழிவு நீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 200 கோடி ரூபாயை மத்திய அரசிடம் பெற்று திட்டத்தை ஆரம்பிக்க துணை புரிந்த தமிழக பிஜேபியின் பொது செயலாளர் வானதி சீனிவாசனுக்கு ஒரு ஜே..

அடுத்து பாருங்கள் அத்திக்கடவு அவினாசி திட்டமும் மத்திய அரசின் பங்களிப்புடன் விரைவில் தொடங்கும்
என்று உறுதியாக நம்பலாம்..

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply