தமிழக பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டுசாதனை மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை பற்றிய விளக்ககூட்டம் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது.

கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது அதிகாரப் போட்டி நடக்கிறது. மக்கள் தத்தளித்துகொண்டு இருக்கிறார்கள். பா.ஜனதா கட்சி 14 மாநிலங்களில் ஆட்சிநடத்துகிறது. அங்கும் குழப்பம்வரத்தான் செய்யும். அவை பேசி தீர்க்கப்படும்.

இப்போது அரசியல் பிரிவுக்கு காரணம் மோடி என்று குற்றம்சாட்டுகிறார்கள். மோடியை பொறுத்தவரை கருப்புபண ஒழிப்புக்குத்தான் அவர் காரணம்.

ஒவ்வொரு கட்சியும் அந்தகட்சிக்குள்ளேயே சுருங்கி விடுகிறது. ஆனால் பா.ஜ.க.,வின் எதிர்காலம் கோடிக்கணக்கான தொண்டர்களின் கைகளில் உள்ளது.

தமிழக இளைஞர்களின் நாடித் துடிப்பை உணர்ந்த மோடி, வாடி வாசலை திறக்கச்செய்தார். தேசிய உணர்வோடு கூடிய தமிழகம், தமிழக உணர்வோடுகூடிய தேசியம் என்பதுதான் நல்ல பலனை தரும்.

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அடிக்கடி கூறிவருகிறார். அவரும் எங்களிடம் இருந்து சென்றவர்தான். முதலில் உங்கள்கட்சிக்குள் நீங்கள் காலூன்ற பாருங்கள். அதன் பிறகு மற்றகட்சிகளை பற்றி பேசுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply