:சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:

மாகாராஷ்டிரா மாநில உள்ளாட்சிதேர்தலில் பா.ஜ., அமோகவெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த பண மாற்றத்திற்கு கிடைத்தவெற்றி இது. தமிழகத்தில் தற்போது குழப்பமான சூழல் உருவாகி உள்ளது. திடமான சூழல் உருவாகவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது. தற்போது இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்றார்.

Leave a Reply