தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான் என்று கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்று வந்த "தாகம் தீர்க்கும் யாத்திரை' நிறைவுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:


5 மாநில தேர்தல்முடிவுகள் பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களுக்கு மக்கள்கொடுத்த அங்கீகாரத்தை காட்டுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வாழும் தொகுதிகளில்கூட பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான் என்றார்.

மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது:
தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள், குளம், குட்டைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால் மழை பெய்தாலும் நீர்நிலைகள் நிரம்புவதில்லை. இந்தயாத்திரையின் முக்கிய நோக்கம் நீர்நிலைகளைத் தூர்வாருவதும், ஆக்கிரமிப்புகளை அகற்று வதுமாகும். பவானி, நொய்யல் ஆறுகளில் கழிவுகள் கலக்காமல்பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் எவ்வளவு நீர் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றார்.

Leave a Reply