தமிழகத்தில் பயங்கர வாத பயிற்சி முகாம்கள் உள்ளன. ஜல்லிக் கட்டுக்காக நடந்த மாணவர்கள் போராட்டத்தை அவர்கள் பயன் படுத்தி கொண்டனர். முதல்வர் பன்னீர்செல்வம் நன்றாக செயல்பட்டுவருகிறார். பீட்டா, விலங்குகள் நல வாரியத்தின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது.


காங்கிரசில் இருப்பதால், 'பணத் தட்டுப்பாடு நீங்கவில்லை' என்கிறார் சிதம்பரம். கல்விதகுதியில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு 'நீட்' தேர்வு அவசியம். தமிழகத்தில் 10 ஆயிரம்கோடி ரூபாயில் கிழக்கு கடற்கரை சாலை, 11 ஆயிரம்கோடி ரூபாயில் பெங்களூரு– சென்னை தேசியநெடுஞ்சாலை பணி, மதுரையில் ரூ.5 ஆயிரம் கோடி ரூபாயில் சுற்றுசாலை உட்பட 50 ஆயிரம்கோடி ரூபாயில் பணிகள் நடக்க உள்ளது.'பெப்சி',- 'கோக்' குளிர்பானங்களுக்கு எதிராக 35 ஆண்டுக்கு முன்பே தெருத் தெருவாக குரல்கொடுத்தது பா.ஜ.க,.

பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜல்லிக்கட்டு இல்லை.ஜல்லிக்கட்டு நடத்த நான் எடுத்தமுயற்சிகள் கூடுதல் பலன்தந்துள்ளதாக தெரிகிறது. மாணவர்கள் போராட்டம் கூடுதல்பலன் தந்துள்ளது. விரும்பத்தகாத சக்திகள் போராட்டத்தை பயன்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவந்த பெருமை அனைவருக்கும் சேரும். என்னை கட்டாயப்படுத்தி என்னிடம் கேட்டால், மோடியைதான் சொல்வேன். திமுக கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்கியிருந்தால், இன்று பிரச்னை ஏற்பட்டிருக்காது. இவ்வாறு கூறினார்

Leave a Reply