தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தி உருவெடு த்துள்ளது. தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துவருகிறது. மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கதேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள், மாண வர்களின் உணர்வை புரிந்துகொண்டு, அதைமதித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் மற்றும் அரசாணை கொண்டு வரப்பட்டது. ஆனால், மாணவர்கள் போராட்டத்தை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றனர். இந்த சூழ்ச்சி முறியடிக்கப் பட்டுள்ளது.


இந்தியாவில், ரூ. 150 கோடியில் முதல் முதலாக முதியோருக்கான 2 மருத்துவமனைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பாஜகவால் கால்ஊன்ற முடியாது என காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் 2 கழகங்களுக்கும் மாற்றாக பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பாஜக சார்பில் பண்டிட் தீன தயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா, மாநில பயிற்சிமுகாம் நிறைவு விழா மற்றும் மாநில செயற்குழுகூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அளித்தபேட்டி:

 

Leave a Reply