வங்கியில் கணக்குத்தொடங்கும் சிரமத்தை போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இதனால் தற்போது நாடுமுழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், 87 சதவீதம் பேர் ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். இதில் தமிழகம் முன்னோடியாக 87 சதவீதம்பேருக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 99.9 சதவீதம் பேர் ஆதார் அட்டையை பெற்றிருப்பது மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பை காட்டுகிறது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளில் ரூ.66,466 கோடி சேமிக்கப்பட்டிருப்பதன் மூலம், சாதாரணமக்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்கிக்கணக்கு வைத்துள்ளோர் ரூ.12 மட்டுமே செலுத்தி விபத்துக் காப்பீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும 5 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தினால் பாதிக்கப் படுபவர்களின் குடும்ப நலனுக்காக இந்த காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களின் நலனுக்காக, அடல் ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இளைஞர்கள், மகளிர் உரிய வேலை வாய்ப்பைப் பெறும்வகையில், முத்ரா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9.22 கோடி பேருக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக் கணக்கான தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப் பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் ஒவ்வொருவரும், குறைந்த பட்சம் 100 பேருக்காவது வேலை வழங்கிட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்றார்.

சேலம் மாவட்ட அளவில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார்.
 நிகழ்ச்சியில், முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவியை பயனாளிகளுக்கு வழங்கி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.