நாட்டிலேயே தமிழகத்தை சிறந்தபண்பாட்டு பிரதேசமாக மாற்றுவதற்கு பாடுபட்டவர் சூரிய நாராயண ராவ் என மேகாலய ஆளுநர் புகழாரம் சூட்டினார்.


மறைந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கி.சூரிய நாராயண ராவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னைமீனாட்சி கல்லூரி அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.இதில் மேகாலய ஆளுநர் சண்முகநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:-


இங்குள்ள அனைவரும் மனதிலும் சோகம்இருக்கிறது. அதேபோல், என்னுடைய உள்ளத்திலும் ஆழ்ந்த வருத்தம் உள்ளது. அந்தளவுக்கு சூரியநாராயண ராவ் தமிழகத்தில் இரண்டறக்கலந்தவர், இந்த மக்களின் உணர்வோடு சேர்ந்தவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிக உயர்ந்த வாழ்க்கையாகும். நான் 30 ஆண்டுகள் அருகில் இருந்து பார்த்தவன்.


மேலும், இந்து மக்களின் ஒற்றுமை என்பது, ஒருவருக்கு ஒருவர் நல்லபரஸ்பரம், உதவி, அன்பு இருந்தால் போதும் என வலியுறுத்தியவர். என்னை பொருத்தவரையில் அவர் கருணையில் பேராறு. இந்தளவுக்கு நல்லவரை, பெரியவரை நாம் இழந்துவிட்டோம் என்பதால்தான் எல்லாருடைய மனங்களில் சோகம்இருக்கிறது.
சேவைசெய்வதே பரிகாரம்: இதற்கு ஒரேஒரு பரிகாரம்தான் உள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் கிராமங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட இடங்களிலும் சூரிய நாராயண ராவ் போல் சேவைப் பணியாற்ற தொண்டர்களை உருவாக்கவேண்டும். அவர்கள் சுயநலமற்ற எண்ணத்துடன் வாழவேண்டும். அவர்கள் தன்னலமற்ற தியாகச் சீலர்களாகவும் இருக்கவேண்டும். இந்த ஆண்டில் நிறைய பிரசார சேவகர்களை உருவாக்க வேண்டும் என அவர் விரும்பினார்.


இந்தியாவிலேயே தமிழகத்தை ஒருசிறந்த பண்பாட்டு பிரதேசமாக மாற்றவேண்டும் என பாடுபட்டவர். அதனால் தலை சிறந்த சேவை ப்பணியாளர்களை உருவாக்கி அவருக்கு சமர்ப்பிப்போம். அவருக்கு சிரம்தாழ்த்தி மனப் பூர்வமான நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் என்றார்.

Leave a Reply