வர்தாபுயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மஹரிஷி, தேசியபேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 268 பேரை உள்ளடக்கிய 8 மீட்புக் குழுவினர், 29 படகுகளுடன் தமிழகத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சென்னையில் மட்டும் 108 பேர் களத்தில் உள்ளனர். புயலால் சாலைகளில விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரத்தில் 205 பேர் அடங்கிய 6 குழுக்கள் 20 படகுகளுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்தும், மத்திய, மாநில அமைப்புகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங் திருப்தி தெரிவித்தார்.

Leave a Reply