தமிழ்மொழி குறித்த பிரதமர் மோடியின் கருத்தை தமிழர்கள் பாராட்டாதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:-உலகத்திலேயே மிகப்பழைமையான மொழியாக தமிழை பெற்றிருப்பதில் நாம் பெருமைப் படுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தையை எந்தப்பிரதமரும் கூறியதில்லை. சம்ஸ்கிருதத்தைவிட பழைமையான மொழி தமிழ் எனத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களே இதைச்சொல்வது கிடையாது. தமிழ் ஆர்வலர்கள் சொன்னதில்லை. இதற்காக தமிழகம் அவரை கொண்டாடியிருக்க வேண்டும்.

தமிழ்மீது நமக்கு உண்மையாக பற்று இருக்குமானால், ஓராண்டு முழுவதற்கும் அந்த கருத்தை வைத்து கொண்டாடி இருக்கவேண்டும். ஏன் கொண்டாடவில்லை. உலகத்தில் தமிழை தூக்கிநிறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியகருத்தை ஏன் கொண்டாடவில்லை.

இதனை விட தமிழுக்கு யார் கௌரவம்கொடுக்க முடியும்.  பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை  ஒருதொடக்கமாக வைத்துக் கொண்டு நாம் எவ்வளவோ முன்னேறி இருக்க முடியும். தமிழை எந்த அளவுக்கும் கொண்டு போய் இருக்க முடியும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

Comments are closed.