தமிழக முதல்வராக ஆறாவதுமுறையாக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று சாதனைபடைத்துள்ளது. தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்புவிழாவில் தமிழக ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
 
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அரசுமுறைப் பயனாமாக ஈரான் நாட்டுக்கு பிரதமர் சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டார். ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.
 
பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர். இந்நிலையில், ஈரான் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ‘தமிழகரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துசெய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply