ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் தமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். அவர்கள் தற்போது போராட்டம் அறிவித்திருப்பது நிழலோடு யுத்தம்செய்வது போன்றது. தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை யிட்டதால் தமிழக அரசுக்கு தலைக்குனிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து நன்குதெரிந்த பின்னர்தான் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற அதிகாரிகள் மீது இதைவிட கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பார்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ரத்துவிவகாரம் குறித்து தமிழக அரசு கவலைப்பட வேண்டும்.இலங்கை – இந்திய அதிகாரிகள் இந்தமாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவும், அடுத்தமாதம் 2 ஆம் தேதி இருநாட்டு அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முடிவில் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத்தீர்வு ஏற்படும் என்றார் அவர்.

Leave a Reply