தமிழக அரசு வழங்குவது "அம்மா' அரிசிஅல்ல, மோடி அரிசி என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக் கிழமை தெரிவித்தார்.

  போடி தொகுதி பாஜக. வேட்பாளர் வீ.வெங்கடேஷ் வரனை ஆதரித்து போடி திருவள்ளுவர் சிலைமுன் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது: திமுக., அதிமுக. கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்து இலவசங்களை கொடுத்தனவே தவிர இளைஞர்களுக்கு வேலைதரவில்லை. ஆனால் பாஜக. ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு தருவோம்.

 தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசிகொடுத்து அதை அம்மா அரிசி என கூறுகின்றனர். ஆனால் அதற்கு ரூ.32 மானியமாக மத்திய அரசு தருகிறது. மாநிலஅரசு ரூ.3 மட்டுமே தருகிறது. எனவே அது "அம்மா' அரிசி அல்ல. பிரதமர் மோடி அரிசி என்றுதான் கூறவேண்டும். நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் அகண்ட அலை வரிசை இணைப்புகள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகளை மக்கள் பெற்றுவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அகண்ட அலை வரிசை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வில்லை. போடி பகுதியில் குரங்கனி டாப்ஸ்டேசன் மலைச் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக. வேட்பாளர் வெற்றிபெற்று அதற்கான விண்ணப்பம் அளித்தால் நான் உடனே நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

 பின்னர் அவர் செய்தியா ளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது, முல்லை பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப் படுத்த 28 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிகோரும் கடிதம் எதுவும் தனக்கு தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்றார்.

 

Leave a Reply