காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.  தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழகம் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாங்கள் தெரிந்து கொண்ட வகையில், மத்திய அரசு எந்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை.  மத்திய அரசைப் பொறுத்தவரை தற்போது சாத்தியமல்ல என்று சொன்னது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி காவிரி நதி நீர் ஆணையத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவும், இந்த வழக்கில் இரண்டு மாநிலங்கள் தான் மனுதாரர்,  மத்திய அரசு அல்ல என்ற வகையிலும், தங்களது நிலைப்பாடு என்ன என்று தெளிவு பெற வேண்டும் என்பதாலும், காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே அமைப்பதில் நிர்வாக சிக்கல் இருப்பதாலும,; அது மட்டும் எந்தவகையில் தீர்வை ஏற்படுத்த முடியும்? என்பது ஓர் தெளிவற்ற நிலை இருப்பதாலும், அவர்கள் இந்த தகவலைத் தெரிவித்திருக்கலாம்..


அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி நதி நீர் ஆணையத்தை மட்டும் எப்படி மதிக்கும் என்பது அனைவரின் கேள்வியாகவே உள்ளது.  ஏனென்றால், காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டது என்று காவிரி கண்காணிப்பு குழுவின் செயலாளர் தெரிவித்ததும், பிரதமர் அலுவலகத்தில் இது தொடர்பாக கூட்டம் நடந்தது என்பதும், பாண்டிச்சேரி, கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் காவிரி நதிநீர் ஆணையத்தின் பிரதிநிதிகள் பெயரை பரிந்துரைக்க சொன்னதும், கர்நாடகம் அதற்கும் செவி சாய்க்கவில்லை என்ற நிலையிலும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது என்பது தெளிவாகின்றது., கர்நாடக அரசு,  தமிழக கோரிக்கையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டத்தையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் கூட்டத்தையும், மத்திய அரசின் கோரிக்கையான உறுப்பினர் நியமனத்தையும் ஏற்காததையும்;, எதிர்ப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். நாளைய தினம் வழக்கு வர இருக்கின்ற நிலையில,;  மத்திய அரசு தெரியப்படுத்த இருக்கின்ற நிலைப்பாடு பற்றி தெளிவான விவரங்கள் தெரியாத போது, மத்திய அரசை இன்று குறை கூறுவது சரியான நிலைப்பாடு இல்லை.


தமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வே;ணடும், என்பதிலும், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது.  அதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.  அதற்கு தொடர்ந்து நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம்.
         இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்    

                                                                     (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply