தமிழக மாணவர்கள் நீட் தேர்வை (மருத்துவ படிப்பிற்கான தேசியதகுதி நுழைவுத் தேர்வு) நேர்மறையாக எடுத்து கொண்டு சந்திக்கவேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நீட்தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு அனைவருக்கும் சமமானகல்வியை கொடுக்கவேண்டும் என்பதே முக்கியநோக்கம். நீட்தேர்வை மாணவர்கள் தமிழிலும் எழுதலாம். இதனை தமிழகமாணவர்கள் நேர்மறையாக எடுத்துகொண்டு தேர்வினை தயக்க மில்லாமல் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply