தமிழக மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறைசெலுத்துவது மோடி தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் சனிக் கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாநிலம் மிகச் சிறிய பகுதி. பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக உள்ள இங்கு, சிறப்பான ஆட்சி புரிந்தால் வளர்ச்சிபெற பல்வ்று வாய்ப்புகள் உள்ளன.

இங்கு இதுவரை ஆட்சிபுரிந்த கட்சிகள் எதுவும் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. பாஜகவால் மட்டுமே புதுவையில் நேர்மையான நிலையான ஆட்சியை தரமுடியும்.

இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 550 தமிழக, காரைக்கால் மீனவர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் மோடி பொறுப்பேற்ற பின் ஒரு மீனவர்கூட கொல்லப்படவில்லை. மோடி அரசின் முயற்சியால் தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர். தமிழக, புதுவை மீனவர்கள் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி அரசு தான் என்று பேசினார்.

Leave a Reply