தமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.தமிழக மீனவர் கொல்லப்பட்டது மற்றும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


இதுகுறித்து வெள்ளிக்கிழமை நிர்மலா சீதாராமன் செய்தியா ளர்களிடம் கூறும்போது, “தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் வெளியுறவு அமைச்சகம் அதிகாரிகளை சந்திக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க அரசு ஏற்பாடுசெய்துள்ளது.சுஷ்மா சுவராஜின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் மீண்டும் நாடாளுமன்ற அலுவல்களில் ஈடுபட்டுள்ளதால், தமிழக மீனவப் பிரதிநிதிகளைச் சந்திக்க அவர் தயாராகஇருக்கிறார் என்றார்.


தமிழக மீனவர் தொடர்பான பிரச்சினையை தீர்க்க மத்தியஅரசு தீவிரமாக ஒவ்வொரு மட்டத்திலும் முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.

Leave a Reply