தமிழ் ராணுவ வீரனை சத்தீஸ்கரில் கொலை செய்த கம்யூனிஸ்ட்டுகளை தட்டிக்கேட்க தமிழ் உணர்வாளர்கள் ஏன் கம்யூனிஸ்ட் அலுவலங்களில் போராட்டம் நடத்தவில்லை?

    பவானி அணையில் தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் ஏன் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை முற்றுகையிடவில்லை?

    ஏனென்றால் அரசியல் வியாபாரத்தில் கழகங்களும் கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டாளிகள்!

     கெயில் திட்டத்திற்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் கையெழுத்து போட்டு கும்மாளம் போட்டுவிட்டு, மத்தியில் ஆட்சிமாற்றம் வந்துவிட்டதால், எதிர்பார்ப்பது கிடைக்காது என்பதால், வார்த்தைமாறி பேசுகிறார்கள்!

    ’தமிழ்‘, ’தமிழ் உணர்வு’, என்பதெல்லாம் இவர்களின் அரசியல் வியாபார யுத்திதான்!

    இவர்களின் நோக்கம் பணம் மட்டுமே! தமிழனை கொலைசெய்யும், தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் கம்யூனிஸ்ட் இவர்களின் எதிரி அல்ல! யாராவது நாட்டுக்கு நல்லது செய்தால் அவர்கள்தான் இவர்களின் எதிரி! ஏனென்றால் நல்லது நடந்துவிட்டால் இவர்களின் அரசியல் வியாபாரம் படுத்துவிடும்! இப்போதைக்கு இவர்களின் எதிரி பாஜக மட்டும்தான்!

 குமரிகிருஷ்ணன்

Leave a Reply