விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென சந்தித்துப்பேசினார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று பகல் 1 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவரை திருமாவளவன் வரவேற்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்தச்சந்திப்பு குறித்து பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

அசோக்நகரில் உள்ள பாஜக நிர்வாகி முரளியின்வீட்டுக்கு சென்றேன். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் அருகில் இருப்பதாகவும், அங்கு திருமாவளவன் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, அவரை நேரில்சென்று சந்தித்தேன்.

திருமாவளவனும் நானும் 25 ஆண்டுகால நண்பர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணன் – தம்பிகளாக பழகி வருகிறோம். தமிழன் என்ற முறையிலும், அண்ணன் – தம்பி என்ற முறையிலும் அவரை சந்தித்தேன். பொதுவான அரசியல் விஷயங்களை இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், காவிரிப்பிரச்சினை, தேர்தல்கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply