பெல்ஜியம் நாட்டின் பிரஸ் ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர் ராகவேந்திர கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் தமிழக மென் பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் ஒருவர் என்பது தெரியவந்தது. இதனை பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகமும் உறுதிசெய்தது.

இந்நிலையில், தமிழர் ராகவேந்திரன் கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில், கண்மூடித் தனமான தாக்குதலில் நம்பிக்கை மிகுந்த இளைஞரின் உயிர் பறிபோ யிருக்கிறது என கூறியுள்ளார்.

Leave a Reply