முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். தமிழிசை சவுந்தர ராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17-ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்க வுள்ளது.


இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலை வர்களுக்கும் தமிழிசை சவுந்தர ராஜன் நேரில் அழைப்புவிடுத்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை நேரில்சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

இதேபோல் தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தமிழிசை சவுந்தர ராஜன் குடும்பத்தினருடன் சந்தித்து, தனதுமகன் திருமணத்திற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது தாம் பிரதமர் மோடி குறித்து எழுதிய புத்தகத்தை ஜெயலலிதாவுக்கு நினைவுப்பரிசாக தமிழிசை வழங்கினார்.

Leave a Reply