மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலம்; மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றிய தமிழ்ப் பாடல்கள் எழுதி அனுப்பினால் அதற்குரிய பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதியுடன் இருந்த நண்பர்கள் அவரை ஒரு பாடல் எழுதி மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.

அதற்கு பாரதியார், நம் கவிதை நன்றாக இருந்தாலும் சங்கத்தார் அதை சரியில்லை என்று ஒதுக்கி விடுவார்கள். அவர்களாக அதைச் செய்யாவிட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து அவர்கள் தயவினை எதிர்பார்த்து என் கவிதையை நிராகரித்து விடுவார்கள். ஆகையால் அவர்களுக்குக் கவிதை அனுப்பும் எண்ணம் இல்லை. வேண்டுமானால் உங்களுக்காகத் தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கி ஒரு கவிதை புனைந்து தருகிறேன்" என்றார்.

நண்பர்களும் ஆகா! எங்களுக்காக அப்படியொரு கவிதையைத் தாருங்கள்!" என வேண்டிக் கொள்ள பாரதியும் ஒரு பாட்டைப் பாடுகிறார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்கிற பாடல்.

தஞ்சை வெ. கோபாலன்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே        

 

Leave a Reply