தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வைஷக்தி, விஷூ, மிசாதி, ரங்கோலி பிகு, நபா பர்ஷா, வைஷகாதி, புத்தாண்டு பிறப்பு வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டிருந்திருந்தார். தொடர்ந்து இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறுமொழிகளிலும் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டிருந்தார்.

ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோடி வாழ்த்து
இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘ தமிழ் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும்ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்’ என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply