கூடங்குளம் முதல்அலகை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ், ரஷிய மொழிகளில் பேசி அசத்தினார்.

அர்ப்பணிப்புவிழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் , "வணக்கம்' என தமிழில் பேசி தனதுபேச்சைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் பேசினாலும், இடையே ரஷியமொழியில் சில வார்த்தைகளைக் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் "மிக்கமகிழ்ச்சி' என்று தமிழிலும் பேசினார்.

இது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்தவர் களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் ஆங்கில உரைகள், ரஷிய அதிபர் விளாதிமீர்புதின் புரிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் ரஷியமொழியில் தில்லியில் இருந்தபடியே மொழிபெயர்ப்பு செய்து அளிக்கப்பட்டது.

Leave a Reply