தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தன் வாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காகவும், தர்மத்திற்காகவும், பாஜக.வின் வளர்ச்சிக்காகவும் உழைத்த பெரியவர் இல.கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவது நம் தமிழக பாஜக.வில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்தகவுரவம் ஆகும்.

பாராளுமன்றத்தில் அவருடைய செயல்பாடு தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பேருதவியாக அமையும் என்பதோடு பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் உறுதிசெய்யும் என்பதில் திடமான நம்பிக்கை உண்டு. இல.கணேசனுக்கு தமிழக மக்கள் சார்பிலும், என் சார்பிலும் வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply