முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான பா.ஜ.க ஆட்சியில் பெட்ரோலியத் துறை மந்திரியாக இருந்தவர் ராம் நாயக். தற்போது உத்தரப் பிரதேச கவர்னராக பொறுப்புவகிக்கிறார். அவர் மராட்டிய மொழியில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை மத்திய மந்திரியாகவும் 3 முறை எம்பி.யாகவும் இருந்தேன். மும்பைக்காக பல்வேறு நலத் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட நான் 2004-ம் ஆண்டு தேர்தலில் தோல்விஅடைந்தேன். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது என்னை எதிர்த்து நடிகர் கோவிந்தா காங்கிரஸ்வேட்பாளராக போட்டியிட்டார்.

நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் கட்டுமான தொழில் அதிபர் ஹில்டன் தாகூர் ஆகியோரை தனது நண்பர்களாக்கி கொண்டு அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை தனக்குசாதகமாக பயன்படுத்தி வெற்றிபெற்றார்.  தேர்தல்சமயத்தில் ஒரு உள்ளூர் தொலைக் காட்சி கோவிந்தா நடித்த படங்களையும் அவரது பிரச்சாரத்தை மட்டுமே திரும்பதிரும்ப ஒளிபரப்பியது.

அந்த தொலைக் காட்சி அதிபர் நீர் பூங்கா அமைக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன். இதனால் தேர்தலில் எனக்கு எதிராக தனது டி.வி.யில் கோவிந்தா பிரசாரத்தை ஒளிபரப்பினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply