தான்சானியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அந்நாட்டு அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே 5 ஒப்பந்தங் கள் நேற்று கையெழுத்தாயின. இதன் ஒருபகுதியாக தான் சானியாவுக்கு ரூ.616 கோடி கடன்வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

தார் எஸ் சலாம் நகருக்குசென்ற மோடியை, அந்நாட்டு பிரதமர் காசிம் மஜலிவா மற்றும் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு மெம்பி ஆகியோர் விமானநிலையம் வந்து வரவேற்றனர்.

பின்னர் அதிபர் மாளிகைக்கு சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாகவரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அதிபர் ஜான் போம்ப் ஜோசப் மகுபுலியை சந்தித்துப்பேசினார்.

அப்போது ஹைட்ரோ கார்பன், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் சர்வதேசளவில் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இணைந்து செயல்படுவது என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி, ஜன்ஜிபார் தண்ணீர் விநியோக திட்டத்தின் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.616 கோடியை இந்தியா கடனாகவழங்கும்.

இது தவிர தண்ணீர் வள நிர்வாகம் மற்றும் வளர்ச்சி, ஜன்ஜிபாரில் தொழில்பயிற்சி மையம் அமைத்தல், பரஸ்பரம் அதிகாரிகளுக்கு விசாவில்இருந்து விலக்கு அளிப்பது ஆகியவை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்திய தேசிய சிறுதொழில்கழகம் மற்றும் தான்சானியா சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் இடையிலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த சந்திப்புக்குப்பிறகு பிரதமர் மோடியும் அந்நாட்டு அதிபர் மகுபுலியும் கூட்டாக செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோடி பேசும் போது, “தான்சானியாவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் பாது காவல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் பலப்படுத்த முடிவுசெய்துள்ளோம். இந்தநாட்டு மக்களின் தேவை மற்றும் முன்னுரிமையை பூர்த்திசெய்யும் வகையில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்” என்றார்.

பின்னர், பிரதமர் மோடி ‘சோலார் மமாஸ்’ எனப்படும் சூரிய மின் சக்தி பெண் பொறியாளர்களை சந்தித்து உரையாடினார். கிராமங்களில் சோலார் விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை செய்துவரும் இந்தப் பெண்களுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply